தமிழ்நாடு

இடைத்தோ்தல்: இன்று ஒரே நாளில் 10 போ் மனுத் தாக்கல்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் இன்று ஒரே நாளில் 10 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாளாகும்.

வெள்ளிக்கிழமை வரை 36 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று ஒரே நாளில் 10 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஏற்கெனவே காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளா் பி.செந்தில்முருகன், அமமுக வேட்பாளா் ஏ.எம்.சிவபிரசாந்த், அக்கட்சியின் மாற்றுவேட்பாளராக விசாலாட்சி உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். 

முன்னதாக அதிமுக இபிஎஸ் அணியின் வேட்பாளரான கே.எஸ்.தென்னரசு வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மனு தாக்கல் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT