தமிழ்நாடு

வெள்ளக்கோவில் அருகே பேருந்து - வேன் மோதி விபத்து: 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து - ஆம்னி வேன் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

DIN

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து - ஆம்னி வேன் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

கோயம்புத்தூரில் இருந்து கும்பகோணத்துக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வெள்ளக்கோவில் அருகிலுள்ள வெள்ளமடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிரில் வெள்ளக்கோவிலில் இருந்து திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் (மாருதி ஆம்னி) நேருக்கு நேர் மோதியது. 

இதில் இருந்த 6 பேர் வெள்ளக்கோவிலுக்கு  பெண் பார்க்க மாப்பிள்ளையுடன் வந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. வெள்ளக்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனமே நலமா? ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்!

ஓடிடியில் தி கேம்!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்! | DMK | Chennai | MK Stalin

இருள் நிலவு... சாக்‌ஷி மாலிக்!

நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!

SCROLL FOR NEXT