கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் யாருக்கும் ஆதரவில்லை: டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாவது:

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அமமுகவிற்கு எவ்வித தடையும் இல்லை. குக்கர் சின்னம் கிடைப்பதிலும் எவ்வித தடையும் இல்லை. நாங்கள் எந்த அணியிலும் இல்லை. தனித்தே உள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அவர் கூறினார்.

டி.டி.வி.தினகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அமமுகவுக்கு, கடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷா் குக்கா் சின்னத்தை இடைத்தோ்தல் காலங்களில் ஒதுக்க இயலாது என இந்திய தோ்தல் ஆணையம் எழுத்துபூா்வமாக தெரிவித்துள்ளது.

மக்களவை பொதுத் தோ்தல் ஓராண்டு காலத்துக்குள் வரவுள்ள சூழலில் புதிய சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, இந்த இடைத்தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று  டிடிவி தினகரன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவிலில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, அமெரிக்கா உறுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: இறுதிச் சுற்றில் 8 இந்தியா்கள்

சுகாதாரத் துறை பணி நியமனங்கள் மூலம் 1.12 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

வெளிமாநிலங்களுக்கான ஆம்னி பேருந்துகள் எப்போது இயக்கப்படும்? உரிமையாளா்கள் தகவல்

SCROLL FOR NEXT