தமிழ்நாடு

பாஜக வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது: தெலங்கானா எம்எல்சி கவிதா

பாஜக வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று தெலங்கானா எம்எல்சி கவிதா தெரிவித்தார்.

DIN

பாஜக வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று தெலங்கானா எம்எல்சி கவிதா தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு 2024 தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற தலைப்பில் தெலங்கானா எம் எல்சி கவிதா பேசினார்.

பாஜக மீண்டும் வெற்றி பெறாது என நம்புகிறேன். தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. நம்பகத்தன்மை, வாக்குறுதிகள், வெளிப்படைத்தன்மை போன்றவை கூறி இரண்டு முறை ஆட்சிக்கு வந்த பின்னரும் எதையும் கடைபிடிக்கவில்லை. தற்போது அவர்கள் வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது. புதிய முகத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் என நம்புகிறேன். நாடு முழுவதும் எங்களது பணியை தொடர பாரத ராஷ்டிர சமிதியாக கட்சியின் பெயரை மாற்றியுள்ளோம். ஒரே கருத்துடைய கட்சிகளை சந்தித்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

மேலும்,  “நேற்று ஒன்றரை மணிநேரம் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர், அதானியை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நீங்கள் ஊழலற்றவர் என்றால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்? எதிர்க்கட்சிகள் அதை மட்டும்தான் கேட்கிறார்கள். பாஜக ஏன் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை பாதுகாக்கிறார்கள்.

எங்கள் மாநிலத்தில் விவசாய திட்டங்கள் தொடங்கியுள்ளோம். நாளுக்குநாள் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துதான் வருகிறோம். ஆனால், மத்திய அரசு பயனாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றது. நாட்டை மோடி தவறாக வழிநடத்துகிறார். இளைஞர்கள் அனைவரும் பிரதமரின் பேச்சைக் கேட்டு எத்தனை பொய் சொல்கிறார் என எண்ணுங்கள்” என்று கவிதா பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT