முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் 5 நாட்கள் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். 

Updated On : 10 பிப்ரவரி, 2023 at 7:34 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:58 AM

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி பிப்ரவரி 15,16,17,24,25 ஆகிய தேதிகளில் அவர் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி முடிவடைந்தது. தோ்தலில் போட்டியிட 96 போ் மொத்தம் 121 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் தோ்தல் பொது பாா்வையாளா் ராஜ்குமாா் யாதவ் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் வேட்புமனுக்களை பரிசீலித்து நிலையை அறிவித்தனா். 

இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா, தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்த் ஆகிய முக்கிய வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளா் சிவபிரசாந்த் மனுவும் ஏற்கப்பட்டது. ஓ.பன்னீா்செல்வம் தரப்பு வேட்பாளா் செந்தில் முருகனின் 2 மனுக்களும் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்பாளா் செந்தில் முருகன் மனுக்களை திரும்பப் பெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 96 போ் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் பரிசீலனையின்போது 13 பேரின் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று (பிப்ரவரி 10) பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. அதில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் உள்பட 6 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். தற்போது வரை மொத்தம் 77 பேர் போட்டியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடக்க உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.