தமிழ்நாடு

ஆராய்ச்சிகள் பொருளாதாரப் பலன்களுக்கானவை அல்ல: யுஜிசி தலைவர்

DIN

பல்கலைகழகங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் பொருளாதாரப் பலன்களுக்கானவை அல்ல என்று பல்கலைகழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.

சென்னையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் கல்விச் சிந்தனை அரங்கில் கலந்து கொண்டு ஜெகதீஷ் குமார் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“பல்கலைக்கழகங்கள் என்பது சமூக நிறுவனங்கள். இளம் கல்வியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் இருக்கும் ஒரே இடம் பல்கலைக்கழகங்கள்தான். அவர்களால் தங்களது படிப்பை நிறைவு செய்தபிறகு சிறப்பான சமூகத்திற்கான பங்களிப்பை வழங்க முடியும். 

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் பொருளாதாரப் பலன்களுக்கானவை அல்ல. அவை ஆர்வத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.  நல்ல திறன் வாய்ந்த நிறுவனத்தை உருவாக்க விரும்பினால் நாம் புதிய விஷயங்களிலும், அதற்கான பாதையிலும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரந்துபட்ட அளவிலான கல்வியை வழங்குகிறோம்” எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT