நெல் ஈரப்பதம்: திருச்சியில் மத்திய குழு ஆய்வு!
நெல்லில் ஈரப்பத சதவீதத்தை உயர்த்துவது தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லில் ஈரப்பத சதவீதத்தை உயர்த்துவது தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மழை காரணமாக காவிரி, டெல்டா மாவட்டங்களில் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த சூழலில் அரசு கொள்முதல் செய்யும் நெற்பயிரில் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை எடுத்து மத்திய குழுவினர் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் நாகையில் தொடங்கிய இந்த ஆய்வு மூன்றாவது நாளாக இன்று திருச்சியில் நடைபெறுகிறது. இந்த ஆய்வில் ஒன்றிய குழுவைச் சேர்ந்த யூனுஸ், பிரபாகரன், போயா ஆகியோர் சூரியூர், குண்டூர் பகுதிகளில் நெல் ஈரப்பத அளவை ஆய்வு செய்கின்றனர்.
இந்த ஆய்வில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் உடன் பங்கேற்றுள்ளனர்.