தமிழ்நாடு

பிரதமராக வேண்டுமென்று ராகுல் காந்தி விரும்பவில்லை: வானதி சீனிவாசன்

பிரதமராக வேண்டுமென்று ராகுல் காந்தி விரும்பவில்லை என்பதுதான் இங்கு பிரச்னையாக இருப்பதாக தமிழக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

DIN

பிரதமராக வேண்டுமென்று ராகுல் காந்தி விரும்பவில்லை என்பதுதான் இங்கு பிரச்னையாக இருப்பதாக தமிழக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு 2024 தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற தலைப்பில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசினார்.

அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி பிரதமராக தொடர்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் களம் தெளிவாக உள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் பாஜக நுழைந்துள்ளது. தற்போது 4 எம் எல் ஏக்கள் உள்ளோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு எந்த கட்சியின் கூட்டணியின்றி போட்டியிட்டு 4 எம் எல் ஏக்கள் தமிழகத்தில் வெற்றி பெற்றோம். தமிழ்நாடும் தற்போது மாறிக் கொண்டிருக்கிறது. 

கடந்த 50 ஆண்டுகளாக கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்காத மின்சாரம், கேஸ் சிலிண்டர், குடிநீர் உள்ளிட்டவை முதல் 5 ஆண்டுகளிலேயே கிடைத்துள்ளது. வங்கிக் கணக்கை தொடங்குவது கனவாக இருந்த நாட்டில் கிராமப்புறங்கள் உள்பட அனைத்து பகுதி மக்களும் தற்போது வங்கி கணக்குகளில் மானியம் பெற்று வருகின்றனர்.

கரோனா பேரிடருக்கு மத்தியில் உலகளவில் 5-வது பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறியுள்ளது. பிற நாடுகளில் தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், நமது நாட்டில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கோடிக்கணக்கானோர் தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி பிரதமராக வேண்டுமென்று விரும்பவில்லை என்பதுதான் பிரச்னையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

SCROLL FOR NEXT