கமல்ஹாசன் 
தமிழ்நாடு

இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து 19ஆம் தேதி கமல்ஹாசன் பிரசாரம்

ஈரோடு-கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 19ஆம் தேதி கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். 

DIN

ஈரோடு-கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 19ஆம் தேதி கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். 

ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், மநீம தலைவா் கமல்ஹாசனைச் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தாா். இதையடுத்து தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தல் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக அறிவித்தார். 

இந்த நிலையில் ஈரோடு-கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 19ஆம் தேதி கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் இளங்கோவனுக்காக அவர் பிரசாரம் மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திலும் பங்கேற்று கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு-கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 19-02-2023, ஞாயிறன்று ஈரோட்டில் கீழ்க்கண்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT