தமிழ்நாடு

3 நாட்களில் ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்: வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன்

DIN

திருவண்ணாமலை ஏ.டி.எம்எளில் கொள்ளையடித்த கும்பல் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேவையான அளவுக்கு தகவல் கிடைத்துள்ளது. 9 தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம் இயந்திரங்களில் மட்டும்தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வெளிமாநிலங்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் ஏற்கெனவே நடந்துள்ளது. தமிழ்நாட்டில் இது முதல்முறை. ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்றார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் 4 ஏ.டி.எம். மையங்களில் மா்ம நபா்கள் இயந்திரங்களை உடைத்து ரூ. 75 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். இவா்களை காவல் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம்! ஒருவர் பலி!

மழை நீரில் சிக்கிய பேருந்து: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT