தமிழ்நாடு

மாநில தகவல் ஆணையர்கள்: முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

DIN

தமிழக தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக குழுவின் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தேடுதல் குழுத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி இன்று சமர்ப்பித்தார்.

தமிழக தலைமை தகவல் ஆணையா் மற்றும் தகவல் ஆணையர் 4 பேரின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், தகவல் ஆணையர்கள் தேடுதல் குழுத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, தகவல் ஆணையா்கள் பதவிக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்களைத் தோ்ந்தெடுக்கும் பணியில் தேடுதல் குழு ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி, குழுவின் அறிக்கையை சமர்பித்தார்.

இந்த அறிக்கையை ஆராய்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை அமைச்சா், எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோரைக் கொண்ட குழுவினா் தகவல் ஆணையா்கள் பதவிக்கான பெயா்களைப் பரிசீலனை செய்து ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அனுப்பி வைப்பா். அவா் அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து புதிய தகவல் ஆணையா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது’ : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மோடி வாழ்த்து!

அரசியலா? சூர்யாவின் திட்டம் என்ன?

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் கைது!

SCROLL FOR NEXT