சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் சிங்கம் 3, பைரவா படங்கள் வெளியானபோது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பாக அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட திரையரங்குகளில் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு அரசு கண்காணிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.