தமிழ்நாடு

கோவையில் கார் வெடிப்பு வழக்கின் பின்னணியில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!

கோவையில் கார் வெடிப்பு வழக்கின் பின்னணியில் தேசிய முகமை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

DIN


கோவையில் கார் வெடிப்பு வழக்கின் பின்னணியில் தேசிய முகமை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் கடந்த அக். 23-ஆம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடி விபத்துக்குள்ளானது. இதில் ஜமீசா முபின் என்பவர் உயிரிழந்தார். இது வெறும் விபத்தல்ல இது சதித்திட்டத்தின் பின்னணி என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தன. ஜமேசா முபின் பின்னணி மற்றும் அவர்களின் சகாக்கள் உள்ளிட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன்(23), அப்சர்கான்(28), முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் நடந்த நான்கு நாட்களில் இந்த வழக்கு சென்னை தேசிய முகமை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன. 

வழக்கை கையில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழ்நாடு போலீசாரிடம் இருந்து பெறப்பட்ட கோப்புகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் கோவை வந்த என் ஐ ஏ அதிகாரிகள் ஜமேசா முபினின் மனைவி மற்றும் கைதான நபர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தி இருக்கின்றனர். அதன் அடிப்படையில் புதன்கிழமை காலை சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோயம்புத்தூரை பொறுத்தவரையில் உக்கடம் குனியமுத்தூர் ஆத்துப்பாலம் கரும்புக்கடை ஜி.எம் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவைக்கும் மேற்பட்ட வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். 

முன்னதாக கிடைக்கப் பெற்ற தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நடந்து வரும் இந்த சோதனையில் அடுத்த கட்டமாக யார் கைதாக போகின்றனர்? என்ன கைப்பற்ற போகின்றது? என்பது பின்னர் தெரியவரும். சிறிய கால இடைவெளியில் மீண்டும் தேசிய முகமை அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனை பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT