தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 1.9 கிலோ தங்கம் பறிமுதல் 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கடத்திக் கொண்டு வரப்பட்ட 1.911 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

DIN

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கடத்திக் கொண்டு வரப்பட்ட 1.911 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கடந்த செவ்வாய்கிழமை (14.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணி ஒருவரை சோதனை செய்தனர். 

அவரிடமிருந்து 23 தங்கக்கட்டிகள், 6 தங்க மோதிரங்கள் உள்பட ரூ.98.03 லட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

அந்த விமானப்பயணி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருவதாக,  சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் எம் மேத்யூ ஜாலி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

SCROLL FOR NEXT