தமிழ்நாடு

ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தனி அறையில் உணவு தரக்கூடாது: போக்குவரத்துக் கழகம்

தொலைதூரப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தனி அறையில் உணவு வழங்கக்கூடாது என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

DIN

தொலைதூரப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தனி அறையில் உணவு வழங்கக்கூடாது என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பயணித்திற்கு இடையே உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் நிறுத்துவது வழக்கம். அங்கு பயணிகளுக்கு பொதுவான இடத்திலும், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தனி அறையிலும் உணவுகள் வழங்கப்படும்.

இந்நிலையில், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உணவு வழங்க தனி அறை ஒதுக்க வேண்டாம் என்று உணவகங்கள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் பொது அறையிலேயே வழித்தட போக்குவரத்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கும் உணவு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்க்கு உணவருந்த தனி அறை ஏதும் ஒதுக்கப்பட வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!

இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

இந்தியா - அமெரிக்கா வர்த்தம்! பேச்சுவார்த்தை ஒத்திவைப்பா?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT