தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் கனிமொழி பிரசாரம்! குவிந்த தொண்டர்கள்!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தலையொட்டி திமுக வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி பிரசாரம் செய்து வருகிறார்.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தலையொட்டி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி பிரசாரம் செய்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் பிப். 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பணிமனை அமைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். இதையடுத்து திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். 

கூட்டத்தில் பேசிய கனிமொழி, 'இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது . வடக்கில் இருந்து வரும் மாற்று சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது என மக்கள் தெளிவாக இருக்கின்றனர். மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இந்த தேர்தல் வெற்றி சிறப்பானதாக இருக்கும்' என்று பேசினார். 

மற்றொரு புறம் அதிமுகவின் எடப்பாடி கே பழனிசாமி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT