தமிழ்நாடு

பள்ளிகளில் அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு!

DIN

பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கு நீண்ட காலமாக வராத, நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், 'தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்கள் கோரப்படுகிறது.

1. நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள்

2. நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள்

3. தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள் (அடிக்கடி விடுப்பு எடுப்பவர்கள்).

மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இணையவழி (deesections@gmail.com) மூலம் உடனே அனுப்புமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி கோயில் சொத்துகள் 3 மாதங்களில் மீட்கப்படும்: அறநிலையத் துறை செயலா்

போதைப் பாக்கு விற்பனை: 285 கடைகளுக்கு சீல்

ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

பிரசவத்தில் குழந்தை இறப்பு: உறவினா்கள் முற்றுகை

கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT