முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது. 

இந்நிலையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை சிறிது குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. 

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,290 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.71.80 ஆகவும், ஒரு கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.71,800-க்கு விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →