முகப்பு
தமிழ்நாடு

மயில்சாமி சிறந்த மனிதநேயர்: அன்புமணி இரங்கல்

நடிகர் மயில்சாமி மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:33 AM
கோப்புப்படம்
பகிர்:


நடிகர் மயில்சாமி மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 

மயில்சாமி சிறந்த மனிதநேயர், திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் தாம் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு வழங்கி வந்தவர். 

மயில்சாமி இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 

மயில்சாமியின் உடல் திங்கள்கிழமை (பிப்.20) காலை 10 மணிக்கு வடபழனியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →