முகப்பு
தமிழ்நாடு

குடியரசுத் தலைவரின் நீலகிரி பயணம் ரத்து 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:33 AM
கோப்புப் படம்.
பகிர்:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு இரண்டு நாள் பயணமாக முதன்முறையாக நேற்று தமிழகம் வருகை புரிந்தார். மதுரை மீனாட்சியை தரித்த அவர் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவிலும் பங்கேற்றாா். 

இதையடுத்து குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஹெலிகாப்டா் மூலம் குடியரசுத்தலைவர் வருகை தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

குன்னூரில் மேகமூட்டம், சாரல் மழை போன்ற மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →