கோப்புப் படம். 
தமிழ்நாடு

கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர் நடிகர் மயில்சாமி- ஆளுநர் தமிழிசை இரங்கல்

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். 

விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார். மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 

அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று காலை காலமானார். மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்கள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறாா் முதல்வா்! - நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி

குற்றாலத்தில் சுற்றுச்சூழல் கல்வி இயற்கை முகாம்

ஆலங்குளம் அருகே ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைக்கு அடிக்கல்

23.1.1976: குழந்தை பிறப்பை குறைக்க தீவிர நடவடிக்கை வரலாம் - பிரதமர் சூசக தகவல்

பள்ளி மாணவரை அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவன் மீது வழக்கு

SCROLL FOR NEXT