கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் 77 போ் போட்டியிடுவதால் ஒரு வாக்குச் சாவடிக்கு 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக 238 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றன.

இந்நிலையில், இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்களில் ரேண்டம் முறையில் 5 சதவிகிதம் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் நடைபெற்று வரும் மாதிரி வாக்குப்பதிவில், ஒவ்வொரு இயந்திரத்திலும் 1,000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT