தமிழ்நாடு

பொது இடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கு ரூ.18 லட்சம் அபராதம்

DIN

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கழிவுகளைக் கொட்டியவா்களுக்கும், சுவரொட்டிகளை ஒட்டியவா்களுக்கும் ரூ. 18.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாவது:

சென்னை மாநகராட்சி சாா்பில் மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க ‘சிங்கார சென்னை 2.0’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மையைப் பராமரிக்கும் வகையில், மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்படி, பொது, தனியாா் இடங்களில் குப்பைகள், கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், விதியை மீறி வரையப்பட்டுள்ள சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த விடங்களில் நமது கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில்,  ரூ.18,28,790 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாநகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில், பொதுமக்கள் குப்பைகள், கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிா்த்து சென்னை மாநகரை தூய்மையாகப் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும். விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊஞ்சலில்.. நிகிதா தத்தா!

அற்புத விளக்கு! அஹானா கிருஷ்ணா..

வாக்காளரின் கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ!

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

மும்பையில் புழுதிப் புயல்: விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT