தமிழ்நாடு

ஈரோடு தேர்தல்: பிப். 25 மாலை 5 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும் - தேர்தல் அலுவலர்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளிமாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன, வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், 'ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளிமாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது. மாலை 5 மணியுடன் வெளிமாவட்ட நபர்கள் வெளியேறிவிட வேண்டும். 

ஈரோடு கிழக்கில் விதிமீறல் புகாரில்  பரிசுப் பொருட்கள் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறை மீறல் பிரிவு 453-ன் கீழ் இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அரசுத்துறை வாகன ஓட்டுநா்களுக்கு பாராட்டு

ரே பரேலி பிரசாரத்தில் காந்திகள்!

உரிய எடையளவுடன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கோரிக்கை

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

SCROLL FOR NEXT