தமிழ்நாடு

கோவை: ஊருக்குள் புகுந்த யானையால் பரபரப்பு!

DIN

கோவை: தர்மபுரியில் பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் விடப்பட்ட யானை, மதுகரை அருகே ஊருக்குள் புகுந்தததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட மக்னா என்ற யானை பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது டாப்டாப்ஸ்லிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் கடந்து கோவை மதுக்கரை பகுதியில் உலா வந்து கொண்டுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் மக்னா யானை திடீரென்று ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

வனத்துறையினருடன் இணைந்து ஓசை எழுப்பி யானையை விரட்டும் பணியில் மக்களும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள வீட்டின் சுற்றுச் சுவரை இடித்த யானை, வனத்துறையினரின் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியது. மேலும், பி.கே.புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்குள் யானை நுழைந்ததால், அங்கிருந்த பணியாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

தற்போது குனியமுத்தூர் பகுதியில் உலா வரும் இந்த யானையை விரட்டும் பணியில் 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT