உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் இபிஎஸ் தேர்வு செல்லும்: உச்சநீதிமன்றம்

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

DIN

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஜூலை 11-ஆம் தேதி கூடிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பு அளித்ததை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் தரப்பு பல்வேறு மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அமா்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீா்செல்வம் ஆகிய இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், இரு தரப்பினரும் எழுத்துபூா்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அமா்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்வதாக தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு வெளியே தொண்டர்கள் குவிந்துள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT