முகப்பு
தமிழ்நாடு

'பெண் ஆளுமை ஜெயலலிதா': தமிழிசை செளந்தரராஜன் புகழாரம்

பெண் ஆளுமை ஜெயலலிதாவின் நினைவை அவரது பிறந்தநாளில் போற்றுவதாக புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 24 பிப்ரவரி, 2023 at 9:16 AM
கோப்புப்படம்
பகிர்:

பெண் ஆளுமை ஜெயலலிதாவின் நினைவை அவரது பிறந்தநாளில் போற்றுவதாக புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழிசை செளந்தரராஜன் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

Advertisement

“பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை. துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.