ஓபிஎஸ்ஸுக்கு தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில், ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தினார்.
Advertisement
Advertisement
மேலும், தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக ஓ. பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டு அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.