தமிழ்நாடு

தொண்டர்களைச் சந்தித்தார் விஜயகாந்த் 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை இன்று சந்தித்தார்.

DIN

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை இன்று சந்தித்தார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். அந்த வகையில் 2023ஆம் ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து தேதிமுக கட்சி அலுவலகத்தின் முன்பு அக்கட்சித் தொண்டர்கள் இன்று காலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அறிவித்தப்படியே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜயகாந்த், கட்சித் தொண்டர்களை இன்று காலை சந்தித்தார்.

வீல் சேரில் அழைத்துவரப்பட்ட விஜயகாந்தை கண்டதும் அவரது தொண்டர்கள் கேப்டன் வாழ்க, வாழ்க என கோஷம் எழுப்பினர். அப்போது தொண்டர்கள் மத்தியில் தன் இருகைகளையும் உயர்த்திக் காட்டினார் விஜயகாந்த். தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்களை வரவேற்ற பிரேமலதா, அவர்களுக்கு புத்தாண்டு பரிசுகளையும் வழங்கினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

மேட்டூர் அணை நிலவரம்!

சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்!

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT