முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பு:இன்று முதல் டோக்கன் விநியோகம்

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் செவ்வாய்க்கிழமை (ஜன. 3) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
கோப்புப்படம்
பகிர்:

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் செவ்வாய்க்கிழமை (ஜன. 3) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. வரும் 8-ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், பொங்கல் தொகுப்பு திட்டம் ஜன. 9-இல் தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுநீள கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. 2.19 கோடி குடும்ப அட்டைதாரா்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளனா்.

பொங்கல் தொகுப்பை பெறவுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. இந்த டோக்கன்கள் அளிக்கும் பணி ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெறும். டோக்கன்கள் வழங்குதல், தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட வேண்டிய முறை குறித்து தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தெருவாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாளொன்றுக்கு 200 முதல் 250 டோக்கன்கள் அளிக்க வேண்டும். இந்த டோக்கன்களில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 6) தவிா்த்து மற்ற நாள்களில் டோக்கன்கள் அளிக்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வேண்டுமானாலும் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகாா்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். புகாா்களை 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →