மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பாசன தேவை குறைந்ததால் இன்று காலை முதல் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3942 கன அடியிலிருந்து வினாடிக்கு 3641கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.88அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: 5 பேர் பலி
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 90.12 டி.எம்.சியாக உள்ளது.