தமிழ்நாடு

அவிநாசியில் கான்கிரீட் சட்டம் இடிந்து மேலே விழுந்ததில் கிரேன் உதவியாளர் பலி!

அவிநாசியில் கான்கிரீட் சட்டம் இடிந்து மேலே விழுந்ததில் கிரேன் உதவியாளர் உயிரிழந்தார்.

DIN

 
அவிநாசி: அவிநாசியில் கான்கிரீட் சட்டம் இடிந்து மேலே விழுந்ததில் கிரேன் உதவியாளர் உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த தனியார் உணவகத்தின் பழைய கட்டடத்தை இடிககும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கட்டடத்தின் முன்பகுதியின் சுவர் மீது இருந்த கான்கிரீட் சட்டத்தை அகற்றும் பணி புதன்கிழமை காலை தொடங்கியது.  இதற்காக கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.     

இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் சிவக்குமார்(20) என்பவர் கிரேன் உதவியாளராக வந்திருந்தார். இவர் அவிநாசியை அடுத்து ஆட்டையம்பாளையத்தில் தங்கி கிரேன் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கான்கிரீட் சட்டத்தை அகற்ற கிரேன் கொக்கியில் மாட்டுவற்காக பெல்டை கான்கிரீட் சட்டத்தை சுற்றி கட்டுவதற்காக சட்டத்தின் மேலே ஏறியுள்ளார்.  அப்போது பாரம் தாங்காமல் எதிர்பாராத விதமாக கான்கிரீட் சட்டம் சரியத் தொடங்கியது. புரிந்துக்கொண்ட சிவக்குமார் தப்பிப்பதற்காக உடனடியாக கீழே குதித்துள்ளார். இதில், துரதிர்ஷ்ட வசமாக கான்கிரீட் சட்டம் அவர் மேலேயே விழுந்து நசுக்கியது. பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு எதிரிலேயே அவிநாசி காவல் நிலையம் இருந்ததால், உடனடியாக வந்த போலீசார் சிவகுமார் உடலை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளிலிருந்து மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

இது குறித்த அவிநாசி போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT