உயிரிழந்த ஓட்டுநர் சிவராஜ் 
தமிழ்நாடு

சிதம்பரத்தில் கர்நாடக மாநில அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் மாரடைப்பால் மரணம்! 

கர்நாடகம் மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் என்பவர் மாரடைப்பால், சிதம்பரத்தில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

சிதம்பரம்: கர்நாடகம் மாநிலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் என்பவர் மாரடைப்பால், சிதம்பரத்தில் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கர்நாடகம் மாநிலம், சாம்ராஜ் நகர் கொள்ளக்கால் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்(40).  இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார், கடந்த சில நாள்களுக்கு முன்பு 52 பயணிகளுடன் கர்நாடக அரசுக்கு சொந்தமான அரசு பேருந்துடன் சென்னை அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு புதன்கிழமை அதிகாலை வந்தனர். பின்னர், பக்தர்கள் மற்றும் ஓட்டுநர் சிவராஜ் சாமி தரிசனம் செய்துவிட்டு வாகனத்தை எடுக்க முயற்சி செய்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிதம்பரம் நகர போலீசார் இறந்து போன சிவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சாமி தரிசனம் செய்துவிட்டு பேருந்து இயக்க முயற்சித்த போது மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT