காதல் குறித்து கிருத்திகா உதயநிதி புதிய கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகா உதயநிதி தம்பதியின் மகனான இன்பநிதி மேற்படிப்பிற்காக லண்டனில் உள்ளார்.
இந்நிலையில், இன்பநிதி ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியானது. இதனை சிலர் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் பல சர்ச்சையான கருத்துகள் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வந்த நிலையில், கிருத்திகா உதயநிதி இச்சம்பவத்தைக் குறிப்பிடும் விதமாக டிவிட்டரில், “காதலிக்கவோ அதை வெளிப்படுத்தவோ அஞ்சக் கூடாது. இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் இதுவும் ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.