தமிழ்நாடு

மேட்டூா் அணை:  காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கா்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 3,123 கன அடியிலிருந்து 3,165 கன அடியாக  சற்று அதிகரித்து உள்ளது. 

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.06 அடியிலிருந்து 116.53 அடியாக சரிந்துள்ளது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.   கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 88.04 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT