ரஜினி ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகி சுதாகர் காலமானார்
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவால் இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 71.
இவர் நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலும் நடிகர் ரஜினிகாந்தும் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ரஜினி ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.