ஆனந்தவல்லி அம்பாள் சோமநாதர் சுவாமி கோயில்  திருவாதிரை விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர். 
தமிழ்நாடு

மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் திருவாதிரை விழா: நடராஜர் ஆருத்ரா தரிசனம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை திருவாதிரை விழாவை முன்னிட்டு நடராஜர் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை திருவாதிரை விழாவை முன்னிட்டு நடராஜர் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவாதிரை விழாவை முன்னிட்டு சோமநாதர் சன்னதியில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள மூலவர் நடராஜப் பெருமானுக்கு சந்தனம் கலையப்பட்டு அதன்பின் மூலவருக்கும் உற்சவர் நடராஜப் பெருமானுக்கும் அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் மூலவருக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. உற்சவர் சிவகாமி அம்பாள் சமேதமாய் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.

அதன் பின்னர் நடராஜருக்கு பலவகை தீபாராதனைகள் நடைபெற்று திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டன. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நடராஜர் பெருமானை தரிசனம் செய்தனர்.

நடராஜர் பெருமான் சன்னதி முன்பு ஓய்வுபெற்ற  நாகநாதன் திருவெம்பாவை பாடல்களை பாட கோயிலுக்குள் திரண்டிருந்த பக்தர்கள் பின் பாட்டு பாடினர். திருவாதிரை பூஜைகளை தெய்வசிகாமணி என்ற சக்கரைப் பட்டர், சோமாஸ் கந்தன், பட்டர் குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

கானூரில் பிரளயவிடஸ்கேவரர் கோயிலில் திருவாதிரை விழாவில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் நடராஜர் பெருமான்

திருப்புவனம்
திருப்புவனம் அருகே கானூரில் எழுந்தருளியுள்ள சிவகாமி அம்பிகை உடனாய பிரளய விடேங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற 66 வது ஆண்டு திருவாதிரை விழாவை முன்னிட்டு மூலவர் நடராஜருக்கும் உற்சவருக்கும் அதிகாலையில் அபிஷேகங்கள் நடத்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

அதன் பின்னர் நடராஜப் பெருமானுக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்று நடராஜரரை தரிசனம் செய்தனர் அதன் பின்னர் நடராஜப் பெருமாள் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. நாளை சனிக்கிழமை இக்கோயிலில் திருவாதிரை விழா நிறைவாக தீர்த்த வாரி மற்றும் பொன்னூஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை காணுறு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

SCROLL FOR NEXT