தமிழ்நாடு

7 நாள்களுக்கு பின் லோயர் கேம்ப்பில் முழு கொள்ளளவு மின் உற்பத்தி!

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் 7 நாள்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவான 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி சனிக்கிழமை முதல் தொடங்கியது.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் 7 நாள்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவான 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி சனிக்கிழமை முதல் தொடங்கியது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி, 140 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 7,126 மில்லியன் கன அடியாக இருந்து. நீர் வரத்து வினாடிக்கு 116.53 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,867 கன அடியாக இருந்தது. 

168 மெகாவாட் உற்பத்தி
கடந்த டிச.30 வரை தமிழக பகுதிக்கு அணையிலிருந்து வினாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் அதன் முழு உற்பத்தியான 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பிறகு டிச.31 இல் தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாக  குறைக்கப்பட்டதால்,  மின் உற்பத்தி 45 மெகாவாட்டாக இருந்தது. 

இந்நிலைநிலையில், சனிக்கிழமையில் இருந்து அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்து, வினாடிக்கு 1,867 கன அடியாக திறந்து விடப்பட்டது. அதனால் மின் உற்பத்தி மீண்டும் அதிகரித்து 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டதால் கடைமடை பகுதியில் இரண்டாம் போக சாகுபடி பணிகள் தொய்வில்லாமல் தொடங்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

ஃபயர்... அனசுயா!

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

SCROLL FOR NEXT