வேகமாக சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம்!
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 0.53 அடி சரியத் தொடங்கியுள்ளது.
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 0.53 அடி சரியத் தொடங்கியுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.53 அடியில் இருந்து 116 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3165 கன அடியிலிருந்து வினாடிக்கு 3260 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 87.23 டி.எம்.சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நாள் ஒன்றுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 0.53அடியும் நீர் இருப்பு 0.81 டி.எம்.சியும் சரிந்து வருகிறது.