முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 நாள்களில் 4.55 அடி குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:40 PM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 நாள்களில் 4.55 அடி குறைந்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3017 கன அடியாக குறைந்த நிலையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 115.45 அடியாக குறைந்துள்ளது. 

கடந்த பத்து நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4.55 அடி குறைந்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியிலிருந்து 115.45அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3260 கன அடியிலிருந்து 3017கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 86.39 டி.எம்.சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →