தமிழ்நாடு

தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!

தூத்துக்குடியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, செங்கரும்பு விநியோகிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். 

அதன்படி, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

இதையடுத்து தூத்துக்குடி போல்பேட்டை நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். 

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 5,23,894 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகை பொருட்கள் வழங்கப்பட உள்ளன என்றார். 

நிகழ்வில் தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவ. முத்துக்குமாரசுவாமி, துணைப்பதிவாளர் ரவீந்திரன், மாவட்ட வளங்கள் அலுவலர் அபுல் காசிம், கண்காணிப்பாளர் ஜோசில்வஸ்டர், கூட்டுறவு சார்பாக சூர்யா தனி வட்டாட்சியர் ஜஸ்டின் செல்லத்துரை, விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் அந்தோணி பட்டுராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT