தமிழ்நாடு

ஆளுநர் தாமாக பேசியவை அவைக் குறிப்பில் இடம்பெறாது!

DIN

சென்னை: தமிழக அரசின் அச்சடிக்கப்பட்ட உரையை தவிர ஆளுநர் தாமாக பேசியவை அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளையும் அண்ணா, அம்பேத்கர், கலைஞர் என்ற பெயர்களையும் படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு என்று வார்த்தை இடம்பெற்ற ஒவ்வொரு வாசகத்தையும் ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்துவிட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு என்று ஆர்.என். ரவி குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து, அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்றும் அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் பேரவையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆளுநரின் செயலை முதல்வர் பேரவையிலேயே விமரிசித்துப் பேசியதை தொடர்ந்து, முறையாக தேசிய கீதத்துடன் கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT