முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1570 கன அடியாக குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1570 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த படாத காரணத்தாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.

நேற்று காலை வினாடிக்கு 2009 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 1570 கன அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால், நேற்று காலை 114.84 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.20 அடியாக குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 84.52 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →