சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு 
தமிழ்நாடு

பேரவைக் கூட்டத்தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தாா் அப்பாவு! 

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரை பேரவைத் தலைவா் அப்பாவு தேதிக் குறிப்பிடாமல் வெள்ளிக்கிழமை(ஜன. 13) ஒத்தி வைத்தாா்.

DIN


சென்னை: தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரை பேரவைத் தலைவா் அப்பாவு தேதிக் குறிப்பிடாமல் வெள்ளிக்கிழமை(ஜன. 13) ஒத்தி வைத்தாா்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 9 ஆம் தேதி கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத வகையில் இந்த முறை ஆளுநா் உரை விவாதத்துக்கு உள்ளானது. 

சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஜன. 13) காலை 10 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது ஏற்கெனவே நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வா் வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். 

இதன்பின்பு, நேரமில்லாத நேரத்தில் பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு அரசின் சாா்பில் பதிலளிக்கப்பட்டது. 

4 மசோதாக்கள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடா்ந்து நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு பேரவைக் கூட்டத் தொடரை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். 

அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, கூட்டத்தொடரை தேதிக் குறிப்பிடாமல் பேரவைத் தலைவா் அப்பாவு ஒத்தி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT