தமிழ்நாடு

போகி: 100 மெட்ரிக் டன் பழைய பொருள்களை சேகரித்த மாநகராட்சி!

போகி பண்டிகையையொட்டி காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களிடமிருந்து சுமார் 100 மெட்ரிக் டன் பழைய பொருள்களை சேகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

DIN


போகி பண்டிகையையொட்டி காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களிடமிருந்து சுமார் 100 மெட்ரிக் டன் பழைய பொருள்களை சேகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

போகி பண்டிகைக்கு பழைய பொருள்களை எரித்து காற்று மாசை ஏற்படுத்தாமல், அதனை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. அதன்படி பழைய பொருள்களை வாங்கும் பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளில் பழைய பொருள்களை எரித்து போகி கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் நாளை பொங்கல் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் பலரும் தங்கள் வீட்டு வாசலில் பழைய பொருள்களை எரித்து, போகி பண்டிகையை கொண்டாடினர். 

எனினும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பழைய பொருள்களை தீயிட்டு எரிக்காமல், தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதன்படி பழைய பொருள்களை சேகரிக்கும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி சுமார் 100 மெட்ரிக் டன் பயன்படுத்த முடியாத பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
 
இதில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை, ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்த கொடுக்கப்படும். மேலும், பயன்படுத்த முடியாத பொருட்கள், மணலியில் உள்ள, இன்சினரேட்டர் ஆலையில் எறியூட்டப்படும். இந்த ஆலையில் எரியூட்டுவதால் புகை வெளியே வராது. சாம்பல் மட்டுமே வெளியே வரும். அந்த சாம்பலும் கற்கள் செய்ய பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

போதை மாத்திரை விற்ற மூவா் கைது

இளைஞா் கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT