தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பே காளைகள் முட்டி 3 பேர் காயம்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பே காளைகள் முட்டி 3 பேர் காயமடைந்துள்ளனர். 

DIN


மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பே காளைகள் முட்டி 3 பேர் காயமடைந்துள்ளனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஜன.15) காலை 8 மணியளவில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

போட்டியில் காளையை அடக்கும் மாடுபிடி வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், தங்க காசு உள்ளிட்ட ஏராளமான பரிசிகள் வழங்கப்பட உள்ளன. 

போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு கார் பரிசு மற்றும் பசு மாடும், இரண்டாவது வீரர் மற்றும் காளைக்கு இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்படுகிறது. 

ஜல்லக்கட்டு போட்டில் பங்கேற்க வரும் காளைகளுக்கு மருத்துவ பரிசோனைக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்க மறுத்த மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க கொண்டுவரப்பட்ட காளைகள் முட்டியதில் உரிமையாளர், இளைஞர் என 3 பேர் காயமடைந்துள்ளனர். அடி வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த இளைஞருக்கு 3 தையல்கள் போடப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT