முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் க.பொன்முடி சகோதரர் க.தியாகராஜன் காலமானார்

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் சகோதரரும், பிரபல சிறுநீரக மருத்துவருமான க.தியாகராஜன்(66) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜன.17) அதிகாலை காலமானார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:44 PM
மருத்துவர் க.தியாகராஜன்
பகிர்:


விழுப்புரம்: தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் சகோதரரும், பிரபல சிறுநீரக மருத்துவருமான க.தியாகராஜன்(66) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜன.17) அதிகாலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இதைத் தொடர்ந்து, விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள மரகதம் மருத்துவமனையில் தியாகராஜனின் உடல் உறவினர்கள், கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் க.பொன்முடி தனது சகோதரர் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். 

தொடர்ந்து மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 

மறைந்த தியாகராஜனுக்கு மனைவி மருத்துவர் பத்மினி, மகன்கள் திலீபன், சிட்டிபாபு ஆகியோர் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →