தமிழ்நாடு

தமிழகம்-தமிழ்நாடு ஆளுநர் விளக்கத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வரவேற்பு!

தமிழகம் - தமிழ்நாடு என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள நிலையில், அதனை காங்கிஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

DIN

தமிழகம் - தமிழ்நாடு என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள நிலையில், அதனை காங்கிஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சையை ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மிகவும் சிறப்பு. வரவேற்கத்தக்கது விஷயம்.

இதேபோல, தமிழ்நாட்டின் நலன் கருதி சட்டப் பேரவையின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும் காலம் கடத்தாமல் உடனே ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும். தமிழ்நாட்டின் மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களும் அதில் அடங்கும்.

இவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீது அக்கறையுள்ள, அவர்களின் நலனுக்கு முன்நிற்கும் ஆளுநர் என்ற பெரும் பெயர் பெறுவார். மக்களும் ஆளுநரை வாழ்த்துவார்கள். நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? காத்திருக்கிறோம்.

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகள், செயல்பாடுகளில் ஆளுநர் அவர்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. இதனால், ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT