ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 தேர்தலில் வெற்றி பெற்றதால் தற்போதைய இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனையின் முடிவில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது.