தமிழ்நாடு

நடிகர் வடிவேலுவின் தாயார் உடலுக்கு மு.க.அழகிரி நேரில் அஞ்சலி (விடியோ)

நடிகர் வடிவேலுவின் தாயார் உடலுக்கு மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

DIN

நடிகர் வடிவேலுவின் தாயார் உடலுக்கு மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று(புதன்கிழமை) இரவு உடல்நலக்குறைவால் காலமானார். 

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், அமைச்சர் அன்பில் மகேஷ், சசிகலா உள்ளிட்டோர் வடிவேலுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மத்திய முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி, வடிவேலுவின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் வடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT